அன்புமணிக்கு சவால் விடும் சிம்பு

SIMBU-ANBUMANI

சமீபத்தில் வெளியான விஜயின் சர்கார் பட போஸ்டரில் விஜய் புகை பிடிப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் இதனை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே அந்த கட்சியை சர்க்கார் படக்குழு நீக்கியது.

இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “பாபா படம் முதல் சர்கார் வரை இந்த புகைபிடிக்கும் விவகாரம் பிரச்சனையாக உள்ளதாகவும், இதற்கு முடிவு கட்ட ஒரு விவாதம் நடத்தினால் அதில் தான் பங்கேற்க தயாராக இருப்பதாகவும், அன்புமணி அவர்களுக்கு சம்மதம் என்றால் இந்த விவாதம் நடத்தப்படும் தேதி, இடத்தை அவரே அறிவிக்கலாம்” என்றும் கூறியுள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன