மகன், மகள் வாங்கிக் கொடுத்த வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சூரி

soori

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழும் சூரிக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், அரண்மனை-2,மருது, ரஜினி முருகன்,சகலகலாவல்லவன் உள்ளிட்ட பல படங்களில் இவருடைய காமெடிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது கார்த்தியுடன் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் இவருடைய நடிப்பு மக்களிடையே பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சூரிக்கு வாழ்த்து கூறி வரும் நிலையில் சூரியோ தனது மகள் வெண்ணிலா மற்றும் மகன் சர்வான் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் ஆடம்பரமாக கேக் வெட்டி கொண்டாடினார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன