நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது

Actor-Soundarraja-marriage

`சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. பின்னர் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, `ஜிகர்தண்டா’, `எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, `தங்கரதம்’, `தர்மதுரை’, `ஒரு கனவு போல’, `திருட்டுப்பயலே 2′ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்’, `ஈடிலி’, `கடைக்குட்டி சிங்கம்’ படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் சௌந்ததராஜாவுக்கும், க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் தமன்னாவுக்கும் மதுரை அருகே உசிலம்பட்டியில் வைத்து திருமணம் நடந்தது.

திருமணமத்தில் குடும்பத்தினர், சொந்த பந்தங்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *