அரசியல்வாதியாகும் சூர்யா

NGK

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் நடிக்கும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா ‘எம்.எல்.ஏ’வாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2004-ம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது போன்ற கதையில் சூர்யா நடித்திருந்த நிலையில் தற்போது நேரடி அரசியல்வாதியாக இந்த படத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *