என்.ஜி.கே. ரிலீஸ் தேதியை உறுதி செய்த சூர்யா

NGK

சூர்யா நடிப்பில் தயாராகிவரும் படம் ‘என்.ஜி.கே.’. செல்வராகவன் இயக்கி வரும் இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மேலும், ஜெகபதி பாபு, இளவரசு, ராம்குமார் கணேசன், பாலா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. எப்படியும் இந்த மாதத்திற்குள் ஷூட்டிங் முடிந்துவிடும் என்கிறார்கள்.

இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அப்போதே அறிவிக்கப்பட்டது. அதை, தற்போது மீண்டும் கன்பார்ம் செய்திருக்கிறார் சூர்யா. கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ இசை வெளியீட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன