மூன்றாவது முறையாக விஜயுடன் இணையும் அட்லீ

vijay-atlee

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அரசியல் படமாக இப்படம் அமையும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஜயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜயின் அடுத்த படத்தையும் அட்லீயே இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அட்லீ விஜயிடம் கதை கூறி முடித்து விட்டதாகவும், அட்லீ போலவே பல இயக்குனர்கள் விஜயிடம் கதை கூறியுள்ளதாகவும், எனினும் அட்லீயின் கதையை விஜய் அடுத்த படத்திற்கு தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ மற்றும் ‘தெறி’ படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணியில் படம் உருவாக இருக்கும் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன