கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

திமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் 11 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 7 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

vijay-Kalaingar-Karunanidhi

அன்று முதல் இன்று வரை பொதுமக்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். ராஜாஜி அரங்கத்திற்கு வர இயலாத பிரபலங்கள் மெரினாவில் உள்ள சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். இந்நிலையில் கருணாநிதி மறைவின் போது ‘சர்கார்’ படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்ததாள் நடிகர் விஜய்யால் நேரில் அஞ்சலி செலுத்த இயலவில்லை. எனவே விஜய் சார்பில் அவருடைய மனைவி சங்கீதா நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் சென்னை திரும்பிய நடிகர் விஜய் நேராக மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன