கேரளாவிற்கு நிவாரண தொகை வழங்கிய விஜய் சேதுபதி, தனுஷ்

Vijay-Sethupathi-Dhanush

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

திரையுலகை சேர்ந்த பலரும் கேரளாவிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன் ஆகியோர் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். ராஜ்குமார் சேதுபதி – ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் ரூபாய் 10 லட்சம் பணத்தையும், நடிகை ரோகிணி ரூபாய் 2 லட்சம் பணத்தையும் நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர். நடிகர் சித்தார்த் ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் 25 லட்சமும் நடிகர் தனுஷ் ரூபாய் 15 லட்சமும் அறிவித்துள்ளனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன