விக்ரமின் மகன் கைது

vikram-dhruv

நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது பாலாவின் இயக்கத்தில் ‘வர்மா’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை துருவ் ஓட்டிய கார் சென்னை தேனாம்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்ததோடு, 3 பேர் படு காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்ட துருவ், விசாரணைக்கு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து நடிகர் விக்ரம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “நடிகர் விக்ரம் மகன் துருவ், அவரது நண்பரின் வீட்டிற்கு சென்று விட்டு இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும், ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார். இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன