கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல்

nadigar-sangam-Commemoration2

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்கள் கருணாநிதி குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

nadigar-sangam-Commemoration1

நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. இலக்கியம், சினிமா என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். கருணாநிதியால் அரசியலுக்கு வந்தோர் லட்சம் பேர் உள்ளனர். அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். ஏனெனில் அதிமுக உருவானதற்கு காரணம் கருணாநிதிதான். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்.” என்று கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன