கஸ்தூரிக்கு நேர்ந்த சோகம்

kasturi2

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையான கஸ்தூரி 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர். சில காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த கஸ்தூரி தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீப காலமாக அரசியல் குறித்த தனது கருத்துக்களை அச்சமில்லாமல் அதிரடியாக தெரிவித்து வருகிறார். மேலும் ஊடகங்களில் அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் கலந்துகொண்டும் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு அதிர்ச்சிகரமான துயரச் சம்பவம் நடந்துள்ளது. அவரது தாயார் மற்றும் மகன் இருவரும் ஒரே நேரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை படித்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தெரிவித்து வருகின்றனர்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன