தற்கொலை முயற்சி செய்த கஸ்தூரி

kasturi2

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையான கஸ்தூரி 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர். சில காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த கஸ்தூரி தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீப காலமாக அரசியல் குறித்த தனது கருத்துக்களை அச்சமில்லாமல் அதிரடியாக தெரிவித்து வருகிறார். மேலும் ஊடகங்களில் அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் கலந்துகொண்டும் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்ய
நினைத்தது பற்றி தற்போது ட்விட்டரில் கூறியுள்ளார். பல உறவினர்கள் ஏமாற்றினாலும், பலர் முதுகில் குத்தினாலும் சில நண்பர்கள் இவர் பக்கம் இருந்தார்களாம். அவர்களுக்கு நண்பர்கள் தினத்தில் கஸ்தூரி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நெட்டிசன்கள் தான் இவரை மனஅழுத்தத்தில் இருந்து மீட்க முக்கிய காரணமாம். ட்விட்டர் வாசிகளுக்கும் கஸ்தூரி நன்றி தெரிவித்துளளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன