தேர்வுக்காக நடிப்புக்கு லீவு போட்ட நடிகை

mahima

சாட்டை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்ற நடிகை மகிமா தொடர்ந்து தமிழில் அதிகம் நடிக்காவிட்டாலும், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியுடன் நடிக்க தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஒரு மாதம் நடிப்பிற்கு விடுப்பு எடுக்க முடிவெடுத்துள்ளார். மகிமா தற்போது எம்.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில், இறுதித் தேர்வுகள் தொடங்க இருப்பதால் படிப்பதற்காக ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பிற்கு விடுப்பளித்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன