மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா நம்பியார்

mahima

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் படம் ‘அண்ணனுக்கு ஜே’. கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் பேசிய இயக்குனர் ராஜ்குமார், “இப்படத்திற்குப் பக்கபலமாக இருந்த வெற்றிமாறனுக்கு நன்றி. நடிகர் தினேசுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன். மகிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார். மயில்சாமி மற்றும் வையாபுரி இருவரும் இந்தப் படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்” என்று கூறினார்.

மகிமா நம்பியார் பேசும்போது, தான் டப்பிங் பேசி நடித்ததைக் குறிப்பிட்டார். மேலும் வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ‘தர லோக்கல்’ கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளதாகவும் கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன