சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் – மியா ஜார்ஜ்

miya-george

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை மியா ஜார்ஜ் தமிழில் அமரர் காவியம், வெற்றிவேல், நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மேலும் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு பெட்டியில் ‘பெண்களுக்கு எல்லா துறையிலும் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. குறிப்பாக பெண்கள் வேலை செய்யும் இடங்களில் நிறைய அச்சுறுத்தல்களை சந்திக்கிறார்கள். பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறது. திரைப்பட தொழில் சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவர்கள்தான் செய்கிறார்கள். சினிமா வியாபாரம் கதாநாயகர்களை சார்ந்துதான் நடக்கிறது.” என்று கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன