ஹாலிவுட் படத்திற்கு தயாராகி வரும் நிவேதா பெத்துராஜ்

Nivetha-Pethuraj

‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், ஒரு சில படங்களில் நடித்த பிறகே சர்ச்சைகளில் சிக்கிவிட்டவர், அவற்றை தூக்கி எரிந்துவிட்டு முன்னணி ஹீரோயின்களின் பட்டியலில் இடம்பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளார்.

ஜெயம் ரவியுடன் நிவேதா நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், மேலும் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் அவருக்கு திடீரென்று ஹாலிவுட் ஆசை பிறந்திருக்கிறது.

பொதுவாக கோலிவுட்டில் நடித்த ஹீரோயின்கள் பக்கத்து மாநிலமான டோலிவுட்டில் நடித்த பிறகு பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சிப்பார்கள். ஆனால், நிவேதாவோ நேரடியாக ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

தற்போது அவெஞ்சர்ஸ் படத்திற்கான ஆடிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். அதில் கலந்துக்கொள்வதற்காக நிவேதா பெத்துராஜ் தயாராகி வருகிறாராம்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன