ரஜினி, கமலின் அரசியல் என்ட்ரி குறித்து பிரியா பவனி சங்கரின் கருத்து

Priya

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, சீரியலில் நடித்து புகழ் பெற்று, தற்போது திரைத்துறையில் வெற்றிகரமாக வளம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். ‘மேயாத மான்’ படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த நடிகை பிரியா அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியுடன் சமீபத்தில் நடித்து வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ரஜினி, கமலின் அரசியல் முடிவு குறித்து கேட்டபோது, “ரஜினி, கமல் இருவரையுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கள் இப்போதுதான் கட்சிப் பெயரை அறிவித்திருக்கிறார்கள். மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டுமென்று அவசியமில்லை. அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேரப் படம் கிடையாது, அவர்கள் தேர்தலில் ஜெயித்து வெற்றிபெற்று ஐந்து வருடங்கள் ஆட்சி செய்யப்போகிறார்கள். எனவே இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண குடிமகளாக முடிவெடுப்பேன். நான் ரஜினி, கமல் படம் ரிலீஸ் ஆனால், முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன். அதே நேரத்தில் படம் வேறு அரசியல் வேறு. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன