கேரளாவிற்கு 2 லட்சம் நிவாரணம் வழங்கிய ரோஹிணி

rohini

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலதரப்பட்டவர்களும் கேரளாவிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன் ஆகியோர் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். ராஜ்குமார் சேதுபதி – ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் ரூபாய் 10 லட்சம் பணத்தை நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை ரோஹிணி கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூ.2 லட்ச ரூபாய் பணத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன