சினிமாவில் நுழையும் நடிகை சீதாவின் மகள்

80 களில் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த ஹீரோயின்களில் சீதாவும் ஒருவர். ‘ஆண் பாவம்’, ‘ராஜநடை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் நிலையில், சீதாவின் மகளும் நடிகையுமான கீர்த்தனாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில், சீதாவின் மற்றொரு மகளான அபிநயா, கல்லூரி படிப்பை முடித்துவிட்டாராம். அதனால் அவர் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

abinaya

இதுவரை அபிநயாவின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகமல் இருந்த நிலையில், தனது அப்பா, அம்மாவுடன் அபிநயா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *