நடிகை ஸ்வாதிக்கு திருமணம்

swathi2

2008ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சுப்ரமணியபுரம்’. இப்படத்தை சசிகுமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் ஜெய், சமுத்திரகனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பெற்று வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி. அதன் பின் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்வாதி தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்வாதி தற்போது திருமணம் செய்துக் கொள்ளவிருக்கிறார். தனது நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார். வரும் ஆகஸ்ட் 30 ம் தேதி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.

swathi2

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன