ராஜு முருகன்-ஜீவா கூட்டணியில் ‘ஜிப்ஸி’ படப்பிடிப்புத் துவங்கியது

gypsy

ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படபிடிப்பு காரைக்காலில் இன்று தொடங்கியது.

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் படம் இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதில் ஜீவா ஜோடியாக இமாச்சலப் பிரதேச மாடல் நடாசா சிங் நடிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று காலை வெளியிட்டனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தெரிவித்திருக்கிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன