நார்வே, சுவிஸ் நாட்டில் காலா படத்துக்கு தடை

kaalaJPG
ரஜினி நடித்த காலா படம் வரும் 7-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூற சென்ற ரஜினி. சமூக விரோதிகள் சிலரால் தூத்துக்குடி போராட்டம் கலவரமாக மாறியதாக கூறினார். ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி வருகிறது.
இதற்கிடையே காவிரி விவகாரத்தில் குரல் கொடுத்ததற்காக காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடக வர்ததக சபை தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், அதுபற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ‘காலா’ படத்தை நார்வே மற்றும் சுவிட்சர்லாந்திலும் ரிலீசாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறாக ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், அடுத்தடுத்து ‘காலா’ ரிலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ‘காலா’ படத்தின் வசூலுக்கு இது பின்னடைவாக அமையும் என்று சினிமா வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன