மீண்டும் அபிஷேக் பச்சனுடன் இணைந்த ஐஸ்வர்யா ராய்

aishwarya-rai

‘உலக அழகி’ பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்து மிகப்பெரிய வெற்றி பெற்றார். நடிகையாக இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் கவனம் ஈர்த்தார். மணிரத்னத்தின் ‘குரு’ படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்தார். அப்படத்தின் போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து திருமணமும் செய்துகொண்டார்கள். அதன்பின் மீண்டும் மணிரத்னத்தின் ‘ராவண்’ படத்தில் இணைந்து நடித்தார்கள்.

இந்நிலையில் தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். ‘குளோப் ஜாமூன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதியினர் கருது வேறுபாடு காரணமாக பிரிந்துவிட முடிவெடுத்துள்ளதாக கிசு கிசு பரவி வந்த நிலையில் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன