கோலிவுட்டில் தமிழ் பெண்களுக்கு மரியாதை இல்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்

aishwarya_rajesh

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தையும், மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்களுக்கு மரியாதை இல்லையென்றும், மற்ற மொழி பெண்களே அதிகம் மதிக்கப்படுகிறார்கள் என்றும், தமிழ் நன்றாக பேசும் தமிழ் பெண்களை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை என்றும், சமந்தா, ரெஜினா போன்றவர்கள் தெலுங்கில் பெரிய ஹீரோயினாக ஆனப் பிறகு தான் தமிழில் வாய்ப்புகள் அதிக அளவில் வந்தது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவரிடம் திருமணம் குறித்து கேட்ட போது இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லையென்றும், அது நடக்கும் போது நடக்கட்டும் என்றும் கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன