திரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

சினிமாவிலும், அரசியலிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று, தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்து, ‘இரும்பு பெண்மணி’ என அழைக்கப்பட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள். இவர் மறைந்தப் பின் இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பல இயக்குனர்கள் முயற்சி எடுத்தனர். இவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ.எல்.விஜய் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான திரைக்கதையை தற்போது இயக்குனர் விஜய் எழுதி வருவதாகவும், இப்பணி முடிந்தவுடன் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் நடிகை குறித்து முடிவு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Director-A_L_Vijay

என்.டி.ஆர்., கபில் தேவ் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் விப்ரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பாதியில் ஜெயலலிதாவின் திரையுலக வாழ்க்கை குறித்தும், இரண்டாம் பாதியில் அவரது அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன