இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க சீரியல்

priyanka-chopra

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ‘குவாண்டிகோ’ என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். உலக அளவில் பிரபலமாக இருக்கும் இந்த சீரியலில் அவர் சி.ஐ.ஏ அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒளிபரப்பான இந்த சீரியல் எபிசோட் ஒன்றில், இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாகிஸ்தானியர் போல நடித்து நியூயார்க் நகரில் அணு குண்டை வெடிக்க சதி செய்வது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த காட்சிக்கு இந்தியர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் சீரியலுக்கு எதிராக பதிவிட்டு வந்தார்கள். எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வந்த நிலையில், சீரியல் தயாரிப்பு நிறுவனம் இந்தியர்களின் மன்னிப்பு கேட்டுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன