விவசாயிகள் கடனை செலுத்திய அமிதாப்பச்சன்

AMITABH-BACHCHAN

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத ஏழை விவசாயிகள் பெயர் பட்டியலை வங்கிகளிடம் இருந்து பெற்று 200 விவசாயிகள் வாங்கிய ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கான கடனை செலுத்தி இருக்கிறார். மேலும் உயிர் நீத்த ராணுவ வீரர்கள் 44 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடியை பகிர்ந்து அளித்துள்ளார். அமிதாப்பச்சனின் இந்த செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்திகளை படிக்கும்போது மிகவும் வேதனை அடைகிறேன். ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என வாங்கிய கடனை கூட திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து பல ஆண்டுகளுக்கு முன்பே 40 முதல் 50 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவி அளித்தேன். தற்போது 200 விவசாயிகள் வாங்கிய ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கான கடனை செலுத்தி இருக்கிறேன். மேலும் உயிர் நீத்த ராணுவ வீரர்கள் 44 பேரின் பெயர் பட்டியலை பெற்று அவர்களது மனைவி மற்றும் தாய், தந்தையர்களுக்கு ரூ.1 கோடியை பகிர்ந்து அளித்து உள்ளேன்.” என்று கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன