கலைஞர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமிதாப் பச்சன்

Amitabh-bacchan-Karunanidhi

திமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம்(07/08/2018) மாலை 6.10 மணியளவில் காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி, கமல், அஜித், சூர்யா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஏராளமான சினிமா பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்திலும் இரங்கல் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். கலைஞர் கருணாநிதி சிறந்த தலைவர் என்றும் ,அவர் முதலமைச்சராக இருக்கும் போது தான் விருது வாங்கி இருப்பதாகவும், அவருக்கு தன்னுடைய பிரார்த்தனை மற்றும் இரங்கல் என்று பதிவு செய்திருக்கிறார்.

 

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன