சிம்புவுடன் விவாதிக்க தயார் – அன்புமணி

anbumani

சமீபத்தில் வெளியான விஜயின் சர்கார் பட போஸ்டரில் விஜய் புகை பிடிப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் இதனை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே அந்த கட்சியை சர்க்கார் படக்குழு நீக்கியது. இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வைப்பது தொடர்பாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக நடிகர் சிம்பு டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு சவால் விடுத்தார்.

இந்நிலையில் தமிழக அரசை விமர்சித்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு டாக்டர் அன்புமணி மேல் தொடரப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக நேற்று சென்னையில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் ஆஜரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘சர்கார்’ பட விவகாரத்தில் தான் நடிகர் விஜய்க்கு நல்லதைத்தான் கூறியதாகவும் , விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் உடல் நலத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார். மேலும் சிம்புவின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இதுதொடர்பாக விவாதிக்க நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தால் விவாதிக்க தான் தயாராக இருப்பதாகவும் நிருபர்களிடம் கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன