மீண்டும் அஜித்துடன் நடிக்கும் அனிகா

anikha

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் “விஸ்வாசம்” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கும் நிலையில் மற்றொரு கதாநாயகியாக காலா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற நடிகை ஈஸ்வரி ராவ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இளம் நடிகை அனிகா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிகா ஏற்கனவே அஜித்துடன் `என்னை அறிந்தால்’ படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன