சிவகார்த்திகேயனுக்காக விட்டுக் கொடுத்த அனிருத்

anirudh

மூன்றாவது முறையாக இணைந்துள்ள பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ படம் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள இப்படத்தில் வில்லியாக சிம்ரன் நடித்துள்ளார். நெப்போலியன், சூரி, யோகிபாபு, சதிஷ், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் சீமராஜா படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்கள் மத்தியில் மிக பிரமாண்டமான வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயனுக்கு விட்டுக்கொடுக்கும் வகையில் நேற்று இசையமைப்பாளர் அனிருத் வெளியிடவிருந்த கோலமாவு கோகிலா பாடல் டீஸர் இன்று வெளியிடப்படுகிறது. “இது சீமராஜா தினம்., அதனால் பாடல் நாளைக்கு ரிலீஸ்” என அனிருத் ட்விட்டரில் கூறியுள்ளார். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன