இயக்குனரை தோசைக்கல்லால் தாக்கிய அஞ்சலி

anjali3

அஞ்சலி தற்போது ‘லிசா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். ராஜு விஸ்வநாத் இயக்கம் இப்படம் இந்தியாவில் முதன்முறையாக 3டி டெக்னாலஜி ஸ்டீரியோஸ்கோப் தொழில்நுட்பத்தில் உருவாகும் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தில் அஞ்சலி கேமராவை நோக்கி தோசைக்கல்லை வீசி எறிவது போன்ற கட்சி படமாக்கப்பட்டது. அப்போது தோசைக்கல் திசைமாறி இயக்குனரின் நெற்றியில் பட்டு ரத்தக்காயத்தை ஏற்படுத்தி விட்டது. பின் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தையல் போடப்பட்டது. இதனால் அன்றைய தினம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன