படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை

Anupama-Parameswaran

பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா. தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் பிரகாஷ்ராஜ் மகளாக “ஹலோ குரு பிரேமகோசம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பின் போது திடீரென அனுபமா மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குளிர்காய்ச்சல் மற்றும் ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் கூறினர் . சிகிச்சைக்கு பின் அனுபமா குமடைத்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன