அரவிந்த்சாமி படத்திற்கு மீண்டும் சிக்கல்!

bhaskar-oru-rascal

அரவிந்த்சாமி, அமலாபால் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் இன்று வெளியாக இருந்த நிலையில், மீண்டும் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டு ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, அமலாபால், சூரி, ரோபோ சங்கர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஏற்கனவே பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் போன நிலையில், இன்று (மே 11) படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு விளம்பரமும் செய்யப்பட்டு வந்தது. நேற்று மாலை பத்திரிகையாளர்களுக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில், இப்படம் மே 11 ஆம் தேதி வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு அறிவித்தது.

வாரத்திற்கு நான்கு படங்கள் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதிமுறைப்படி, வாரம் நான்கு படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம், விஷாலின் ‘இரும்புத்திரை’, கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ வெளியாக இருந்த நிலையில், இந்த போட்டியில் இருந்து அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *