அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Arulnithi

அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்’. இரவில் நடக்கும் மர்மங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருந்த இந்த படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அருள்நிதி, தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார்.

இந்த நிலையில், அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அருள்நிதி அடுத்ததாக பரத் நீலகண்டன் என்ற புதுமுக இயக்குநருடன் கைகோர்த்திருக்கிறார். இந்த படத்தை எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கிறது.

அருள்நிதியின் 12-வது படமாக உருவாகும் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜூலையில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன