ஆர்யாவின் தம்பிக்கு கல்யாணம்!

arya_brother

திருமணத்திற்காக டிவி சேனலுடன் ஒப்பந்தம் போட்டு ஒரு சுயம்வரத்தையே நடத்தினாலும், ஆர்யாவுக்கு திருமணம் மட்டும் ஆனபாடில்லை. இதற்கிடையே, அந்த டிவி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அபர்ணதி என்பவர் கட்டுனா ஆர்யாவ தான் கட்டுவேன், இல்லனா திருமணமே செஞ்சிக்க மாட்டேன், என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில், ஆர்யாவின் தம்பியான நடிகர் சத்யாவுக்கு இந்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

ஷாகிர் என்ற ஆர்யாவின் தம்பி சத்யா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘புத்தகம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சத்யா, ஆர்யா தயாரித்த ‘அமரகாவியம்’ என்ற படத்திலும் ஹீரோவாக நடித்தார். ஆனால், இரண்டு படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாதாதல் அவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. தற்போது ஆர்யா ஹீரோவாக நடிக்கும் ‘சந்தன தேவன்’ படத்தில் சத்யா ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சத்யாவுக்கும், துபாயை சேர்ந்த இந்து பெண்ணான பாவனாவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, சத்யாவுக்கும், பாவனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, வருகிற 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன