சூர்யாவுடன் நடிக்கும் ஆர்யா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

arya-surya

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

 

சமீபத்தில் பூஜையுடன் லண்டனில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கும் இந்த படத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன