அசுரவதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Asuravatham

`கொடிவீரன்’ படத்தை தொடர்ந்து சசிகுமார் அடுத்ததாக ‘அசுரவதம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை மருது பாண்டியன் இயக்கியுள்ளார். சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். இந்த படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், அசுரவதம் படம் வரும் ஜூன் 29ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியில் அதர்வா நடிப்பில் செம போத ஆகாதே படமும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன