படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அதர்வா

Atharvaa

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான நடிகர் அதர்வா அவரது 29-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

சமூக வலைதளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் நடித்து வரும் `பூமராங்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி அதர்வா பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடினர்.

Boomerang-Atharvaa-Birthday

இதில் படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன், நாயகி மேகா ஆகாஷ், காமெடி நடிகர் சதீஷ், மொட்டை ராஜேந்திரன் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதர்வா நடிப்பில் `செம போத ஆகாதே’ படம் வருகிற மே 18-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *