தமிழ் பேசும் கதாநாயகிகள் குறைந்து விட்டனர் – பாரதிராஜா

Bharathiraja

பாரதிராஜா இயக்கி நடித்துள்ள படம் ஓம். இப்படத்தில் கதாநாயகியாக நட்சத்திரா என்னும் புதுமுகத்தை நடிக்க வைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் தான் அதிகமாக புதுமுகங்களை வைத்து படம் இயக்கவே விரும்புவதாகவும் பிரபலமான நடிகர்கள் படத்தில் இருந்தால் ரசிகர்களுக்கு இவர் இதை செய்வார் என்னும் எண்ணம் இருக்கும். ஆனால் புதுமுகங்கள் என்றால் கதையில் மட்டும் கவனம் இருக்கும் என்றும் பிரபல நடிகைகள் இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்த போதும் கதைக்காக நட்சத்திராவை பிடிவாதமாக இருந்து தேர்வு செய்ததாகவும் கூறினார்.

Natchathra

மேலும் தமிழ் பெண்கள் இன்னமும் சினிமாவில் நடிக்க வர தயங்குவதால் தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் கதாநாயகிகள் குறைந்து விட்டதாகவும், தமிழ் பெண்கள் சினிமாவில் நடிக்க தயங்குவதற்கான காரணம் என்ன என்றே தெரியவில்லை என்றும், ஒருவேளை இயக்குனர்கள் நிறத்துக்காக பிறமொழி நடிகைகளை கொண்டுவர ஆர்வம் காட்டுகிறார்களா என்று சந்தேகமாக இருப்பதாகவும், தன்னுடைய கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன