பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரம்யா வெளியிட்ட வீடியோ

ramya_nsk

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாள்தோறும் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த முறை யாஷிகா வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நித்யா வெளியேறினார். இது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல் இந்த முறை பாடகி ரம்யா வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதுவும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்பு தான் எனக்கு இவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பது தெரிகிறது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எந்த நிலையிலும் கோபப்படக் கூடாது, புறம் பேசக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் அதையும் மீறி சில முறை கோபப்பட்டேன். நீங்கள் பார்ப்பது வெறும் ஒரு மணி நேரம் தான். ஆனால் அங்கு நாள் முழுவதும் சண்டை, சச்சரவுகள் இருந்துகொண்டே இருக்கும். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது எனக்கு மகிழ்ச்சி தான். நீங்களும் மகிழ்ச்சியடைய வேண்டும்.”, என்று கூறியுள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன