‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பு தேதி

big_boss

மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், சமீபத்தில் இதற்கான புரோமோ படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

பிக் பாஸ் இரண்டாம் பகுதி நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்களது இறுதி பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. போட்டியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படும்.

வரும் ஜூன் 17 ஆம் தேதி முதல் பிக் பாஸ் இரண்டாம் பகுதி நிகழ்ச்சி தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுவதால், மக்களிடம் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் புதிய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *