தொடங்கியது பிக் பாஸ் 2 படப்பிடிப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் பிரபலமானதோடு, பலர் சினிமாவில் ஹீரோயினாகவும் ஆகியுள்ளார்கள்.

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் தொகுத்து வழங்கப்போவதில்லை என்று கூறப்பட்டது. மேலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சில முன்னணி ஹீரோக்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் வதந்தி தான் என்று நிரூபித்த தொலைக்காட்சி, இரண்டாம் சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருப்பதாக தெரிவித்தது.

இந்த நிலையில், பிக் பாஸ் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை, பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளது. இரண்டாம் சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இன்று நடைபெறும் படப்பிடிப்பு நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவாம்.

தற்போது போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்க, இறுதி போட்டியாளர்களின் பட்டியல் தயாரானதும், இந்த புரோமோ வீடியோ ஒளிபரப்பட உள்ளதாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com