நயன்தாரா படத்தில் நடிக்கும் பிஜிலி ரமேஷ்

bijili-ramesh

சமூக வலைத்தளங்களின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர்கள் ஏராளம். அவர்களில் சிலர் திரைத்துறையிலும் நுழைந்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போராட்டப் பெண்மணியாக அறிமுகமாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்து அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் ஜுலி இதற்கு சிறந்த உதாரணமாவார். இது போன்று நிறையபேர் பட்டியலில் உள்ளனர்.

அந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர் பிஜிலி ரமேஷ். சமூக வலைதளத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த பிஜிலி ரமேஷ் தற்போது நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அனிருத் இசையில் ஒரு பாடலுக்கு நடித்திருக்கிறார். அப்பாடல் இன்று வெளியாகவிருக்கிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன