பிக் பாஸ் வீட்டுக்குள் போக மறுக்கும் பிந்து மாதவி

bindu_madhavi

நடிகை பிந்துமாதவி கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு சில நாட்கள் தங்கி இருந்தவர். அவர் தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்து வருகிறார்.

இதுகுறித்து பிந்துமாதவி பேசும் போது,

“இது அரசியல் படம். அருள்நிதி எனக்கு நல்ல நண்பர். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகும் பெண்ணாக இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் படமாக இது அமையும். வாழ்க்கையில் ஒருமுறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே இருந்து விட்டேன். அதுபோதும். இன்னொரு தடவை அது நடக்காது.

அப்படி வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன். ஆனால் எப்போதாவது விருந்தாளி போல அழைத்தால் போகலாம். `பிக்பாஸ் 2’வில் கலந்துகொள்பவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள். கண்டிப்பாக ஜெயிக்கலாம்‘’ என்று கூறி இருக்கிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன