பாபி சிம்ஹாவின் புதிய பட அறிவிப்பு

Bobby-Simha

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாபி சிம்ஹா. இதைத் தொடர்ந்து, இவர் உறுமீன், பெங்களுர் நாட்கள், கருப்பன் போன்ற படங்களில் நடித்தார். இவர் தற்போது விக்ரம் நடித்து வரும் சாமி 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் புதுமுக இயக்குனர்கள் ஜேபிஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கும் அக்னி தேவ் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

இப்படத்தில் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் ராஜேஷ் குமார் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட உள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன