பாரதிராஜா மகன் மனோஜ் மீது வழக்குப்பதிவு

manoj-bharathiraja

நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது, ஸ்டெர்லிங் ரோட்டில் மனோஜ் விலை உயர்ந்த பி.எம்.டயுள்யூ காரை ஓட்டி சென்றுள்ளார்.

சோதனைக்காக அவரது கார் நிறுத்தப்பட்ட போது அவர் குடிபோதையில் இருப்பதை அறிந்து போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடிகர் அருண் விஜய் மற்றும் ஜெய் இரவில் குடித்துவிட்டு கார் ஓட்டி போலீஸில் சிக்கியுள்ள நிலையில், இயக்குனர் பாரதிராஜாவின் மகன் பட்டபகலில் குடித்துவிட்டு கார் ஓட்டி சிக்கியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன