நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு

prakash

இந்து கடவுள்களை அவமதித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரபட்டுள்ளது.

இது தொடர்பாக வக்கீல் கிரண் என்பவர் தாக்கல் செய்து உள்ள மனுவில், நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் அவதூறாக பேசி வருவதாகவும், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும் அவர் இந்து மதத்தையும், அதன் கடவுள் வழிபாடுகளையும், இந்துக்கள் கடவுளாக போற்றி வணங்கும் பசுவையும் அவர் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வருகிறார். கோடிக் கணக்கான இந்துக்களின் மனங்களை காயப்படுத்தும் வகையில் பேசி வரும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்த மனுவை பெங்களூரு 4-வது குற்றவியல் மாஜிஸ் திரேட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இது குறித்து பதில் அளிக்க போலீசாருக்கும், பிரகாஷ்ராஜூக்கும் நோட்டீசு அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 25-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன