அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

ajith2
அஜித் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களின் வாழ்த்தால், இந்தியளவில் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. அஜித்துக்கு திரையுலகினர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததில் சில,
அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். அஜித் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், வளத்துடனும் வாழ ராகவேந்திரா சாமியை பிரார்த்திக்கின்றேன் – நடிகர் ராகவா லாரன்ஸ்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். கடின உழைப்பாளிகளுக்கு சிறந்த இன்ஸ்பிரேஷன் – நடிகர் சதீஷ்
நான் வியக்கும், மதிக்கும் மனிதர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார் – நடிகை பியா பாஜ்பாய்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல – நடிகர் நிவின் பாலி
தங்க மனசுக்காரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சி. விஸ்வாசத்தை நினைத்து மகிழ்ச்சியாகவும், திரில்லாகவும் உள்ளது – இசையமைப்பாளர் இமான்.
மேலும் நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் – இயக்குனர் விக்னேஷ் சிவன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடன் நான் நடித்ததில் மிகவும் சந்தோஷம். உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகள் – நடிகை காஜல் அகர்வால்
தமிழ் சினிமாவின் நட்சத்திரம், சிறந்த மனிதர். மகிழ்ச்சியுடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் – நடிகை ஸ்ரீதிவ்யா
திறமையான நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் – ஹன்சிகா
எனக்கு உதவிய அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் – சுசீந்திரன்
இதுவரை இவருடன் படம் பண்ணியதில்லை.. ஆனால் இவர் மனதை படம் பிடித்து இருக்கிறேன்..!
“தங்க மனசு தல”க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!இன்று போல் என்றும் வாழ்க…!!!! – இயக்குனர் வெங்கடேஷ்
உங்கள் பிறந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாள். உங்கள் பிறந்த நாள் எனக்கு திருமண நாளும் கூட.. வாழ்த்துகள் – நடிகர் ஸ்ரீமன்
தல அஜித்குமார் அவர்களுக்கு பிறந்த தின நல்வாழ்த்துகள்.. சாய்ராம் அருள் என்றும் கிட்டடும்..!! – மனோபாலா
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்… இந்த வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் – தனுஷ்
பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகூறி வருகின்றனர்.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *