கலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்ட திரையுலக பிரபலங்கள்

kalaignar6

திமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28 ஆம் தேதி முதல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(07/08/2018) மாலை 6.10 மணியளவில் காலமானார். இச்செய்தியை கேட்டு திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியது. ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி, கமல், அஜித், சூர்யா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஏராளமான சினிமா பிரபலங்கள் கலைஞரின் மறைவையடுத்து தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டிருந்தனர். அவற்றில் சில.,

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன